கட்டுரை

எதிர்க்கட்சியிலிருந்து மாற்றுத்தீர்வுக்கு ‘அரகலய’வின் இயலாற்றலும் அதன்போக்கும்

நான் இப்பத்தியை எழுதிக்கொண்டிருக்கும் போது ‘போராட்டம்’ அல்லது
‘கிளர்ச்சி’ என‌ (தவறாக) மொழிபெயர்க்கப்படும் ‘அரகலய’வானது,
‘ஜனநாயகவாதி’ என்றும் ‘தாராளவாதி’ என்றும் கூறிக்கொண்டிருக்கும்
ஜனாதிபதியின் நடப்பு அரசாங்கத்தால் நசுக்கப்பட்டும் பல வழிகளால்
கூறுபோடப்பட்டும் வருகின்றது. இப்பத்தியின் நோக்கமாவது, தற்போதைய
இடையாட்சிக்காலம் தொடர்பான எமது கூட்டு எதிர்காலத்துக்கு
தேவைப்படத்தக்க வகையிலான சில சிதறலான அவதானிப்புகளை
மேற்கொள்வதாகும்.

எதிர்க்கட்சியிலிருந்து மாற்றுத்தீர்வுக்கு ‘அரகலய’வின் இயலாற்றலும் அதன்போக்கும் Read More »

இடைவெளியைக் கவனியுங்கள்: GBV கொள்கை மற்றும் உண்மை

Mind the Gap என்ற சொற்றொடர் முதலில் ரயில் நிலையங்களில் ரயில் பயணிகளை ரயில்
கதவுக்கும் ரயில் நிலைய நடைமேடைக்கும் இடையே உள்ள இடைவெளியைக் கவனிக்குமாறு
எச்சரிக்க பயன்படுத்தப்பட்டது. இந்த எச்சரிக்கையானது பயணிகளை இடைவெளியில் கவனம்
செலுத்தவும், அதில் விழுந்துவிடாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும்
உள்ளது. இந்தக் கட்டுரையில், கொள்கைக்கும் யதார்த்தத்திற்கும் இடையே உள்ள
இடைவெளியை, குறிப்பாக SGBV கொள்கைகளுக்கும் நமது பல்கலைக்கழகங்களில் உள்ள
யதார்த்தத்திற்கும் இடையே உள்ள இடைவெளியை மனதில் கொள்ளுமாறு வாசகர்களைக்
கேட்டுக் கொள்கிறேன்.

இடைவெளியைக் கவனியுங்கள்: GBV கொள்கை மற்றும் உண்மை Read More »

இலவசக்கல்வி எனும் ஆரம்ப அபாய மணி

ஆவணி 21, 2022ல் தேசிய தொலைக்காட்சியில் கருத்து தெரிவித்த
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) தலைவர், பெருந்தொற்று
மற்றும் ஏற்பட்டுவரும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும்
பல்கலைக்கழக நிர்வாகத்தரப்பில் மாணவர்களை மீண்டும்
பல்கலைக்கழகங்களுக்குள் எடுப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாகக்
கூறப்படுவதாகவும் அதுவரை நிகழ்நிலை கற்கை முறைகளை இடைக்கால
தீர்வாக முன்கொண்டு செல்வதாகவும் தெரிவித்தார். நிகழ்நிலை கற்கைகளை
மேற்கொள்வதர்கான தொலைத்தொடர்பு கட்டணங்கள் தொடர்பில்
மாணவர்களுக்கு வசதிகள் வழங்கப்பட்டிருப்பதாகவும், தொலைத்தொடர்பு
நிறுவனங்களுடன் சமிக்ஞை அலைகளை பலப்படுத்தும்
கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளதாகவும் அதுவரை மாணவர்கள்
சமிக்ஞை கிடைக்கக்கூடிய இடங்களில் நிகழ்நிலை கற்கைகளை
மேற்கொள்ளும்படியும் வேண்டினார்.

இலவசக்கல்வி எனும் ஆரம்ப அபாய மணி Read More »

போராட்டத்தை நசுக்குதல்: கல்வி மற்றும் சமூக வகுப்பு மீதான
கலந்துரையாடல்

போராட்டக்காரர்கள் ராஜபக்ஷாக்களை அவர்களின் அதிகாரம், பதவி,
தலைமைப் பொறுப்பு என அத்தனையிலும் இருந்து பதவிறங்கச் செய்யும்
வகையில் ராஜபக்ஷ ஆட்சியை முறியடித்திருக்கின்றார்கள். இச்சர்வாதிகார
வீழ்ச்சியின் பிற்பாடு, ராஜபக்ஷக்களின் கைப்பாவையாக இருக்கும் ரணில்
விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் பெற்றுக்கொண்ட ஒரு உடைந்த
பெரும்பான்மையோடு பதவியில் அமர்ந்திருக்கின்றார். மக்களின்
ஆணையின்றி பதவியை ஏற்று தன்னை ஜனாதிபதியாக வரிந்திருக்கும்
ரணில் விக்ரமசிங்க, தான் பதவிக்கு வருவதற்கான மூல காரணமான ‘அரகல’
போராட்டத்தை நசுக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றார். இவர்
பதவியேற்று சில மணித்தியாலங்களுக்குள்ளாகவே, ஆர்ப்பாட்டக்காரர்கள்
கோட்டா கோ கம (GGG) தளத்தை கலைக்கும் நோக்கில் இருந்தபோதே,
அதிகாலை வேளையொன்றில் ராணுவத்தினரை ஏவி விட்டதோடு அவர்கள்
பெண்கள் மற்றும் வலது குறைந்தோர் உட்பட பல ஆர்ப்பாட்டக்காரர்களை
தாக்கியுமுள்ளனர்.

போராட்டத்தை நசுக்குதல்: கல்வி மற்றும் சமூக வகுப்பு மீதான
கலந்துரையாடல்
Read More »

கல்வியும் சுகாதார சேவையும் எதிர்கொள்ளும் நெருக்கடி: ஏன் சர்வதேச
நாணய நிதியம் (IMF) ஒரு தீர்வல்ல‌

மக்கள் மிகத்தீவிரமாக அரசாங்க மாற்றத்தை வேண்டுகின்றார்கள் என்பதற்கு
ஜூலை 9ல் நடைபெற்ற பேரணியும் அதனை தொடர்ந்து நடந்த நிகழ்வுகளும்
சாட்சியங்களாக இருக்கின்றன. நாம் அரசாங்கத்தின் பங்காளர்களாக
இருப்பதோடு, அதிகாரத்தை துஷ்பிரயோகிப்பதை விடுத்தும் நாட்டின்
வளங்களின் சமமான பங்கீட்டுக்கும் ஜனநாயகமானதும்
உள்ளீர்க்கக்கூடியதுமான சமூகத்துக்காகவும் கோரிக்கை விடுக்கின்றோம்.

கல்வியும் சுகாதார சேவையும் எதிர்கொள்ளும் நெருக்கடி: ஏன் சர்வதேச
நாணய நிதியம் (IMF) ஒரு தீர்வல்ல‌
Read More »

‘அரகலயவும்’ (போராட்டமும்) ஒருமைப்பாடும் ஒரு கல்வியியலாளரிடமிருந்து சில சிந்தனைகள்

தற்போதைய சூழ்நிலையில் இலங்கையில் சில விடயங்களே எதிர்பார்ப்பை
ஊட்டுவனவாக இருக்கின்றன. கடந்துபோன ஆறு மாத‌ங்களில் நாம்
நினைத்தும் பார்த்திராத ஒரு இருத்தலியல் நெருக்கடியை இப்போது நாம்
சந்திக்கின்றோம். முரண்நகையாக இலங்கை தனது 75ஆவது சுதந்திர
தினத்தில் காலடியெடுத்து வைக்க இன்னும் ஒரு வருடமே இருக்கின்றது.
ஏழு தசாப்தங்களை அண்டும் எமது பின்காலனிய தேச உருவாக்கத்திலும்
நாம் எதிர்கொள்ளும் நிச்சயமற்ற எதிர்காலம் ஒரு நாடாக நாம்
பெருமைகொள்ளத்தக்க விடயமாக காணப்படவில்லை.

‘அரகலயவும்’ (போராட்டமும்) ஒருமைப்பாடும் ஒரு கல்வியியலாளரிடமிருந்து சில சிந்தனைகள் Read More »

பொருளாதார நெருக்கடியில் கல்வி

தற்போதைய பொருளாதார நெருக்கடி நாட்டின் கல்வித்துறையை
பாரியளவில் பாதித்துள்ளது. முன்கல்வி மாணவர்கள் தொடக்கம்
பல்கலைக்கழக இளங்கலை மாணவர்கள் வரை மாணவர்கள், ஆசிரியர்கள்
மற்றும் கல்விசாரா ஊழியர்களென அனைவரும் எதிர்பாராத பல சிக்கல்களை
எதிர்கொண்டிருக்கின்றார்கள். எமது கல்விநிலையங்களும் அடிக்கடி ஏற்படும்
மின்வெட்டு, காகிதாதிகள் மற்றும் இரசாயனங்கள் போன்ற கற்றலுக்கு
தேவையான பொருட்களின் தட்டுப்பாடு போன்றவற்றால் கல்வி
நடவடிக்கைளை தொடர்ந்தும் நடத்த முடியாமல் திண்டாடுகின்றன.

பொருளாதார நெருக்கடியில் கல்வி Read More »

GotaGoHomeமிலிருந்து #அமைப்பு மாற்றத்தை நோக்கி

GotaGoHome பல்தரப்பட்ட கோரிக்கைகளை உள்ளடக்கியது. அவற்றில் ஒன்றே அமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்துவதாகும். புதிய பிரதமரின் நியமனம்
நமக்கு எதை உணர்த்த முடியுமாக இருக்கின்றதென்றால், இலங்கையின்
சமூக, அரசியல் அமைப்புகளின் மீதான நீண்டகால மாற்றமானது
ஏற்படுவதற்கு மிக நீண்ட காலம் எடுக்கலாம் என்பதும் தற்போதைய
பொருளாதார நெருக்கடிக்கான தீர்வை எட்டுவது மட்டும் அதற்கான வழியாக
அமைய முடியாது என்பதுமாகும்.

GotaGoHomeமிலிருந்து #அமைப்பு மாற்றத்தை நோக்கி Read More »

பல்கலைக்கழகமும் தற்போதைய நெருக்கடியும்

இலங்கையர்கள் ஊழலுக்கெதிரான தமது போராட்டத்தை
தொடர்ந்துகொண்டிருக்கும் அதேவேளை, குறிப்பாக ஜனாதிபதி கோட்டாபாய
ராஜபக்ஷ அவர்களையும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அவரது
குடும்பத்தாரையும் பதவிவிலகக்கோரி வருகின்றனர். இவ்வாறான
கோரிக்கைகள் அதிகரித்துக்கொண்டு வரும் நிலையில் அதிலும் குறிப்பாக
ஒரு அரசாங்கத்தை பதவிவிலகக்கோரும் ஆர்ப்பாட்டங்கள் வலுக்கும்
வேளையில் பலமாக அமைந்த ஒரு அரசாங்கத்தின் விதி இத்தகைய சமூக
பொருளாதார இயல்வீழ்ச்சியை எவ்வாறு உருவாக்கியது என்பதே எனது
சிந்தனையாக இருக்கின்றது. இவ்வரசாங்கத்தினுள்ளும் அதற்கு வெளியேயும்
இருக்கின்ற தனிநபர்கள், நிறுவனங்கள், ஏனைய களங்கள், நடைமுறைகள்
மற்றும் பொறிமுறைகள் என்ன செய்துகொண்டிருந்தன அல்லது
என்னவாகின? எனது சூழமைவில் இருந்து பார்க்கையில், இவ்வாறான ஒரு
கொடுங்கனவு உருவாகும் வரை பல்கலைக்கழகங்கள் என்ன
செய்துகொண்டிருந்தன?

பல்கலைக்கழகமும் தற்போதைய நெருக்கடியும் Read More »

தற்போதைய நெருக்கடிக்கு தேவையான கல்வி

துல்லியமான வார்த்தைகளை கூற முடியாதுள்ளது, ஆனால் அதன் சாரம்
இதுதான்: ஒருவர் கூட‌ எமது கல்வி குறித்து திருப்தியாக இல்லை.
கல்வியென்பது சிறந்தவொரு உலகம், நாடு மற்றும் எதிர்காலத்தை கற்பனை
செய்யவைக்க வேண்டும். ஆனால் எமது கல்வி அமைப்பை தக்கவைக்கவும்
அதனை விமர்சனமின்றி வெற்றுப்பார்வையோடு நோக்கவுமே
வழியமைக்கிறது.

தற்போதைய நெருக்கடிக்கு தேவையான கல்வி Read More »