உயர்கல்வி தனியார்மயமாக்கத்தினூடு பொறுப்பாண்மையை பின்பற்றுதல்
நாட்டில் நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில்
உயர்கல்வித்துறையில் பாரிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நயோமி க்லெயினின் ‘பேரழிவு தரும் முதலாளித்துவம்’ ஆய்வுரையின் படி
நிச்சயமற்ற, ஆற்றொணா காலங்களில் ஏற்படுத்தப்படும் சீரிய மாற்றங்கள்
வஞ்சகமான நோக்கங்களை கொண்டிருக்கும். இக்காலங்கள்
முன்மொழியப்படும் மாற்றங்களின் உட்கிடைகளை கவனமாக ஆய்ந்து
பார்க்கும் அவகாசத்தையும் அளிப்பதற்கு வாய்ப்பளிப்பதில்லை. இந்நிலையின்
தீவிரத்தை உணர வேண்டிய நாங்கள் எமது இலவசக்கல்வியின் மீது மீட்க
முடியாத தீங்குகள் விளைவிக்கப்படும் முன்னர் ஒன்றிணைந்து செயற்பட
வேண்டிய கடப்பாட்டில் இருக்கின்றோம்.