பல்கலைக்கழகங்களில் பாலியல் மற்றும் பால்மை சார்ந்த வன்முறைகளை கையாளுதல்
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC), பல்கலைக்கழகம்,
பல்கலைக்கழக பீடங்கள் ஆகியன பாலியல் மற்றும் பால்மை சார்ந்த
வன்முறைகளை (SGBV) கையாள்வதற்கான பல விதிமுறைகளை
கொண்டுவந்தாலும் அவை சமூகத்தில் ஊறித்திளைத்திருப்பதால்
பாதிக்கப்பட்டவர்- பிழைத்தவர்கள் நீதியை கோரும் நடவடிக்கையில்
அவர்கள் தாம் சார்ந்தவர்களால் உணர்வுபூர்வமான ஆதரவை
அனுபவிக்காமல் பெரும்பாலும் தடைகளையே முகங்கொடுக்கின்றனர்.
பொதுவாக உடனிணைபணியாளர்களும் நண்பர்களும் பாதிக்கப்பட்டவர்களை
காப்பாற்ற களத்தில் குதிப்பது உத்தேசிக்கப்படும் குற்றவாளியின்
பொதுமதிப்பையும் அவர் சார்ந்த அமைப்பின் பொதுமதிப்பையும்
பாதுகாப்பதற்கே. பால் மற்றும் பால்மை ஏற்றத்தாழ்வுகள் ஒருவர் சார்ந்துள்ள
சமூக வகுப்பு, இனம், மதம் மற்றும் பிரதேசம் போன்ற வெவ்வேறு
காரணிகளை அடிப்படையாகக் கொண்டு குற்றவாளி மற்றும் பாதிக்கப்பட்டவர்
ஆகிய இரு தரப்புகளின் அடையாளங்களையும் நிர்ணயிக்கும் அதேவேளை,
மிகைப்படுத்தப்பட்ட அதிகாரப்படிநிலையைக் கொண்ட பல்கலைக்கழகங்கள்
போன்ற அமைப்புகள் இவ்வாறான வன்முறைகளை இயலச்செய்வதோடு
அவற்றை மறைக்கவும் செய்கின்றன. பெண்கள் மட்டுமே இவ்வாறான
வன்முறைகளில் பாதிக்கப்படும் தரப்புகள் அல்ல என்பதோடு ஆண்கள்
மற்றும் சிறுவர்களும் வன்முறை இயக்கவியலில் பாதிக்கப்படுவதையும் நாம்
மனதிலிருத்த வேண்டும்.