இருமநிலையை தகர்த்தல்: பல்கலைக்கழகங்களில் பால்மை பல்வகைமை
மற்றும் உள்ளீர்ப்பை ஏற்றுக்கொள்ளல்
அண்மையில் எனக்கு விஷ்னு வாசு அவர்கள் எழுதிய ‘சாரி எந்தபு பிரிமி’
(சாரி அணிந்த ஆண்கள்) நூலை வாசிக்கக் கிடைத்தது. இந்நூல்
இலங்கையில் வாழும் பால்புதுமையினர் குறித்த வாழ்வனுபவங்களின் மீது
வெளிச்சத்தை பாய்ச்சியது. எமது நாட்டில் வழக்கொழுங்காக காணப்படும்
ஈரின பாலியல்பு நடத்தைக்கு இயைபாக இராத காரணத்தாலேயே தத்தமது
குடும்பங்கள், சமூகம் மற்றும் நாட்டின் சட்ட வரைபு ஆகியவற்றால்
புறக்கணிக்கப்பட்டு அமைப்புரீதியான ஒடுக்குமுறைக்கு ஆளாக்கப்படும்
மக்களை குறித்த நெஞ்சை பிளிகின்ற பதிவே இந்நூலாகும்.